திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று மக்களுடன் ஈ.பி.டிபியினர் சந்திப்பு

Sunday, May 21st, 2017

வாழையூற்று மகளிர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இறக்கண்டி வாளையூற்று பகுதி மக்களுடனான சந்திப்பொன்று ஒன்று மகளிர் சங்கத்தலைவி சுதாகரன் கேதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

குறித்த சந்திபில் மகளிர் சங்கத்தலைவி கரத்து தெரிவிக்கையில் – தேர்தல் காலங்களில் தம்மிடம் வந்து வாக்குகளை அபகரித்துச் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் தாம் நாடாளுமன்றம் சென்றவுடன் வாழையூற்றுக் கிராம மக்களை மறந்து கறித்த சந்திப்பில் கலந்தகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராசாவிடம் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

மேலும் தமது கிராமத்தில் 150 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருவதோடு அதில் பெரும்பாலான குடும்பங்கள் கொட்டகை வீடுகளில் தொடர்ந்து வாழ்வதாகவும் இதற்கு அதிகாரிகள் சிலரது அசமந்தப்போக்கே காரணமெனவும் குற்றம் சாட்டினார் அத்தோடு குடிநீர்வசதி கடந்தகால அசாதாரண சூழலால் சேதமடைந்த இந்து ஆலயப்புனரமைப்பு மற்றும் வீதிகள் புனரமைப்பு போன்றவற்றை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனைப் பெற்றுத்தருமாறு ஈ.பி.டி.பியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராசாவிடம் தமது கோரிக்கையினை கிராமமக்கள் முன்வைத்தனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பில் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக புஸ்பராசா தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் கட்சியின் முக்கியஸதர்களான நகுலேஸ் சுதா முன்னாள் கி.அ.ச.தலைவர் மணிவண்ணன் மற்றும் பொதுமக்களென பலர் கலந்து கொண்டனர்.

Related posts: