தினமும் குடித்துத் தர்க்கிக்கும் அந்தணருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!

Tuesday, July 10th, 2018

மதுபோதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் நீதின்றில் முற்படுத்தப்பட்ட அந்தணர் 200 மணித்தியாலங்கள் சமூகசேவை செய்ய வேண்டுமென்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

மது போதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸார் 45 வயதுடைய அந்தணரைக் கடந்த வாரம் கைது செய்தனர். விசாரணையில் அவர் தினமும் மதுபோதையில் வீட்டிலுள்ளவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுகிறவர் என்பதும் தாயாரைத் தாக்குபவர் என்பதும் தெரியவந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

நீதிமன்று அந்தணரிடம் என்ன தொழில் செய்கின்றீர்கள் என்று வினவியபோது ஆலயத்தில் பூசை செய்கின்றேன் என்று அவர் பதிலளித்தார்.

அவரது தந்தையார் மன்றில் முற்பட்டு வீட்டிலிருந்து காலையில் ஒழுங்காகச் செல்வார். மாலையில் மதுபோதையில் திரும்புவார். வீட்டில் தகராறில் ஈடுபடுவார் என்று தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் முன்னரும் ஒரு தடைவ மன்றில் முற்படுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூதாயம்சார் சீர்திருத்தல் திணைக்களத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.

Related posts: