தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 3 மாணவர்கள் கைது!

Wednesday, March 15th, 2017

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்..

எவ்வாறாயினும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவுடன், லோட்டஸ் வீதிக்கு அருகில் தடையை ஏற்படுத்தியுள்ளனர். அதுமாத்திரமின்றி நீதிமன்ற தடையுத்தரவையும் மாணவர்களிடம் காண்பித்துள்ளனர். எனினும் நீதிமன்ற தடையுத்தரவை கிழித்தெறிந்த மாணவர்கள் பொலிஸாரின் தடையை மீறினர்.

இதனால் மாணவர்கள் மீது கண்ணீர்புகை மேற்கொண்டதுடன், நீர்தாரைப் பிரயோகத்தையும் பொலிஸார் மேற்கொண்டனர். இதில் 3 மாணவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: