தகவல் தொடர்பாடல் சஞ்சிகை வெளியீடும்!

Thursday, March 31st, 2016

யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் தகவல் தொடர்பாடல்(ICT)  தினம் அண்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணனி  விஞ்ஞானத் திணைக் களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. தபோதரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ICT மன்ற ஆசிரிய மாணவர்களால் வெளியிடப்பட்ட  I……seope  என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் முதலாவது பிரதியினைக் கல்லூரியின் பீடாதிபதியிடமிருந்து பிரதம விருந்தினர் பெற்றுக் கொண்டார்.  சஞ்சிகையின் ஆய்வுரையினை யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆசிரியர் எஸ். கெளசிகன் ஆற்றினார். இதன் போது ஆசிரிய மாணவர்களின்  பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

Related posts: