ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள விசேட பிரதிநிதிகள் பிரசல்ஸ் பயணம்!

Friday, May 6th, 2016
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று பிரசல்ஸிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று பிரசல்ஸிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் வகைகள் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த விதமான முயற்சியொன்றை மேற்கொண்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையையும் மீளவும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரமளவில் இலங்கையின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வாறு பிரசல்ஸ் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சலுகைத் திட்டத்தை வழங்குமாறு கடந்த 2008ம் ஆண்டில் இறுதியாக செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 11ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மிக முக்கியமான சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..

Related posts: