ஜனவரியில் மட்டும் 6,508 டெங்கு நோயாளர்கள்!

Monday, January 30th, 2017

இம்மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6,508 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இவற்றுள்  43 சவீதமான டெங்கு நோயாளர்கள், மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 1,828 டெங்கு நொயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலேயே ஆகக்குறைவான டெங்கு நோயாளர்கள் (22 பேர்) இனங்காணப்பட்டுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின், வைத்தியரிடம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

dengu

Related posts: