சுற்றுலாத்துறைக்கு மின்சார கட்டணத்தை செலுத்த வழங்கப்பட்ட சலுகையை நீடிக்க யோசனை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, December 19th, 2021

சுற்றுலா விருந்தகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகையினை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கான யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் ஆகியனவற்றுக்கு இந்த சலுகையினை வழங்குவதற்கான யோசனையினை இன்று(20) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திலும் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 2020 மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல், கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டிருந்த மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான சலுகை காலம் இந்த வருடத்தின் இறுதி வரையில் நீடிக்கப்படவுள்ளது.

அதேநேரம், அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில், நிலுவையில் உள்ள சகல மின்சார கட்டணங்களையும் 36 தவணைகளில் செலுத்துவதற்கு சுற்றுலா விருந்தக மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: