சில கட்சிகளில் பெயரளவிலேயே பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர் – கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்!

Sunday, January 14th, 2018

கடந்த காலங்களை போலல்லாது இராணுவ தலையீடுகள் இல்லாத சுதந்திரமான தேர்தலாக தற்போதிய தேர்தலை பார்க்க முடியும். எனவே மக்கள் விரும்பிய கட்சியை ஆதரிக்கவும், வாக்களிக்கவும் சுதந்திரமாக செயட்படக்கூடிய சூழலும் இப்பொழுது உருவாக்கி உள்ளது. இவ்வாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சி சோலைவனம் விடுதியில் இடம்பெற்ற கட்சி வேட்பாளர்களுக்கான கருத்தமர்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கீர்த்தி தென்னக்கோன் இவ்வாறு தெரிவித்தார்.

பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 25 வீதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும் சில கட்சிகளில் பெயரளவிலேயே பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக வட மாகாணத்தை தழுவிய ரீதியில் வேட்பாளர்களை சந்தித்து வருகின்ற நிலையில் ஏற்கனவே சில தேர்தல்களை வட மாகான மக்கள் சந்தித்து உள்ளனர். நீதியான, சுதந்திரமான, அச்சமின்றிய தேர்தலாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான சூழலும் இப்பொழுது உருவாக்கி இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

Related posts: