சிறைச்சாலை வாகன துப்பாக்கி சூடு  தொடர்பில் இருவர் கைது!

Friday, March 17th, 2017

களுத்துறையில் கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் குற்றம் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு புகலிடம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே குறித்த பெண்  காலி வலஹன்டுவா  Walahanduwa,  பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் துப்பாக்கி சூட்டு இடம்பெற்ற பின்னர் குற்றவாளிகளுக்கு ஒரு வாரம் புகலிடம் வழங்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அதேவேளை, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மற்றுமொரு நபர் நேற்று இரவு பாணந்துறை பின்வத்தே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தேவேளை, களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கடுவல நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் சென்ற சிறைச்சாலை வாகனம் இனந்தெரியாத நபர்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: