சிறந்த குறுந் திரைப்படத் தயாரிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, October 20th, 2016

யாழ்.நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தரமாக வசிக்கும் சிறந்த குறுந் திரைப்படத் தயாரிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் வெளியிட்ட குறுந் திரைப்படங்களே இந்தப் போட்டிக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இரு குறுந் திரைப்படங்களுக்கு மேல் ஒருவர் சமர்ப்பிக்கக் கூடாது.

குறுந் திரைப்படப் பிரதிகளுடனான விண்ணப்பங்களை எதிர்வரும்-22 ஆம் திகதிக்கு முன்னதாக நல்லூர் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆ. சிறி தெரிவித்துள்ளார்.

application

Related posts: