சாதாரணதர பரீட்சை மேற்பார்வை அலுவர்களுக்குக் கூட்டம்!

யாழ்ப்பாணம் 2வலயத்துக்குட்பட்ட ஜீ.சி.ஈ சாதாரணதரப் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று யாழ்ப்பாணம் 2 வலயப் பிராந்திய ஒன்று சேர்ப்பு நிலைய நிர்வாகி செ.சந்திரராஜா அறிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஜீ.சி.ஈ சாதாரணதரப் பரீட்சை மேற்பார்வையாளர்கள். உதவி மேற்பார்வையாளர்கள், நோக்குநர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் என்பன இரண்டு இடங்களில் நடைபெறவுள்ளது. வடமாராட்சி கல்வி வலயத்துக்குட்பட்டவர்களுக்கு வடமாராட்சி கல்வி வலய மண்டபத்தில் காலை 9 மணிக்கும், வலிகாமம் கல்வி வலயம் உட்பட கோப்பாய் கோட்டத்துக்குட்பட்டவர்களுக்கு இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் பி.ப 1மணிக்கு நடைபெறவுள்ளது. சகல ஆளணியினரும் உரிய நேரத்துக்குத் தவறாது சமூகமளிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
Related posts:
தலவாக்கலையில் குழு மோதல்
கிளிநொச்சியில் உள்ளூர் உற்பத்திகளுக்கு விசேட விற்பனைக்கூடம்!
முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத்...
|
|