சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை அதிகரிப்பு!

Wednesday, May 31st, 2017

சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சர்வதேச தேயிலை வணிக முகவர்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது கென்யா மற்றும் இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது

இதனால் கடந்த தினங்களில் தேயிலையின் விலை மிகவும் அதிகரித்திருந்ததுதற்போது இலங்கையிலும் அசாதாரண காலநிலை உள்ளிட்ட காரணங்களால் தேயிலையின் ஏற்றுமதி குறைவடைந்துள்ளதுஇந்த நிலையில் தேயிலை விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையின் தேயிலை ஏற்றுமதி குறைவடைந்திருப்பினும், வருவாய் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: