கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஓகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும் கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆறு.திருமுருகன் அவுஸ்திரேலியா பயணம்!
சிறைக் கைதிகளுக்கும் சந்தர்ப்பம் வேண்டும் - நீதிமன்றில் மனு!
நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் - மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெ...
|
|