கொரோனா தொற்றாளர்களுக்கு மத்தியில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

Saturday, August 7th, 2021

நாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் ஆர்னல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இவ்வாறானதொரு காலப்பகுதியில், டெங்கு நோய் தொற்றும் அதிகரித்தால் அது நாட்டின் சுகாதாரத்துறைக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 ஆயிரத்து 134 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து ,292 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் ஆர்னல்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: