கொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையில் யோகர் சுவாமிகளின் 53 ஆவது குருபூசை நிகழ்வு!

Monday, April 10th, 2017

ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் 53 ஆவது குருபூசை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) முற்பகல் கொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

யோகர் சுவாமிகளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுத் தீபாரதனை,பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து யோகர் சுவாமிகள் இயற்றிய நற்சிந்தனைப் பாடல்கள் மாணவர்களால் பண்ணுடன் ஓதப்பட்டது. தொடர்ந்து  இந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- அனந்தலட்சுமி மாணிக்கராஜா சர்மாவின் சிறப்புச் சொற்பொழிவு, மாணவர்களின் குழுப் பஜனை,பேச்சு என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஆக்கத் திறனை வளர்க்கும் நோக்குடன் யோகர் சுவாமிகளின் உருவப்படத்தைப் பார்த்து மாணவ, மாணவிகள் வரையும் போட்டி இடம்பெற்றது. இந்தப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுப் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

Related posts:

அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்ப...
இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – ஊர்காவற...
தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் - இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீக...