குற்றச்செயல்களைத் தடுக்க பொலிஸாரின் சோதனை யாழ்ப்பாண நகரில் அதிகரிப்பு!

Thursday, March 2nd, 2017

யாழ்ப்பாண நகரில் பொலிஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் ஏற்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் தமது ரோந்தை அதிகரித்துள்ளனர்.

அதனைவிட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கால்நடையாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, நகரிலும், புறநகர்ப் பகுதியிலும் பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் இந்த ரோந்துக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடுவோர் மற்றும் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் செல்வோர் மறிக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

police1

Related posts: