இலங்கை வழியாக சீனாவுக்கு கடல் அட்டை அனுப்பியவர் கைது!

Monday, November 14th, 2016

இலங்கை வழியாக சீனாவிற்கு கடத்த பதுக்கிய 428 கிலோ கடல் அட்டைகளை, இராமநாதபுரம் வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், பதுக்கலில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்தனர்.

இராமநாதபுரம், நேரு நகரில் வனச்சரகர் கணேசலிங்கம், வனவர் மதியழகன், வனக்காவலர் அழகேசன் ஆகியோர் சோதனை செய்தனர்.அதில் ஒரு வீட்டினுள் இருந்தவர் கதவை ஒன்றரை மணி நேரம் திறக்காமல் இருந்தார்.

வருவாய்த்துறையினர், போலீசார் வந்த பின் கதவை திறந்த நபர் கழிப்பறைக்குள் ஒழிந்து கொண்டார்.வீட்டில் சோதனை செய்ததில், வீட்டின் மேல் தளத்தில், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 428 கிலோ கடல் அட்டைகள் உலர்த்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

அதை பறிமுதல் செய்து கழிப்பறைக்குள் பதுங்கிய இன்ஜினியரிங் பட்டதாரி சபரிராஜனை, 35, கைது செய்தனர்.அவரிடம் விசாரித்ததில், கடல் அட்டைகளை இலங்கை வழியாக சீனா, தாய்லாந்துக்கு அனுப்புவது தெரிந்தது.சபரிராஜனை இராமநாதபுரம் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் வனத்துறையினர் ஆஜர்படுத்தினர்.இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன., முதல் நேற்று (நவ., 12) வரை 873 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

arrest_1_0_mini-720x480

Related posts:


பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் ...
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - கல்வி அமை...
தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குதே எமது எதிர்பார்ப்பு - பிரதமர் மஹிந்த ரா...