குருனாகலில் பாடசாலை மாணவி மரணம்: 2800 மாணவர்கள் தப்பியோட்டம்!
Tuesday, October 31st, 2017குருனாகல் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கத்தினால் அச்சமடைந்த மாணவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குருணாகல் ஸ்ரீமன் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் 2800 மாணவர்களும் 508 ஆசிரியரும் நேற்று பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்குள் பிரதி அதிபர் மற்றும் அவரது மகளும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த பாடசாலையில் கிட்டத்தட்ட 50 மாணவர்களுக்கும், 15 ஆசிரியர்களுக்கும் டெங்கு தொற்றுக்கு உள்ளான நிலையில், குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் டெங்கு நோய் தொற்று காரணமாக கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இந்நிலைமையில் 4200 மாணவர்களில் 1400 மாணவர்கள் மாத்திரமே நேற்று பாடசாலைக்கு வருகைத்தந்துள்ளனர்.
Related posts:
சிவனொளிபாத மலையில் 200ற்கும்அதிகமானோர் வழிதவறியுள்ளனர்.
நாட்டுக்கு சேவை செய்த மனிதனை அவமதிப்பது தவறு - மகிந்தவுக்கு பிரதமர் பதவி பெரிய விடயமல்ல - பொதுஜன பெ...
ஜனவரியில் உயர்தரப் பரீட்சை - டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|