குப்பிளான் வடக்கில் மிதிவெடி மீட்பு!

Wednesday, September 21st, 2016

குப்பிளான் வடக்கு பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடிக்க கூடிய நிலையில் காணப்பட்ட மிதிவெடி, இன்று(21) மீட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணி உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது உறவினர் ஒருவர் அந்தக் காணியினை பராமரித்து வருகின்றார். அவர் காணியினை துப்பரவு செய்த போது நிலத்தில் புதையுண்ட நிலையில் மிதிவெடி இருப்பதை கண்டுள்ளார்.  அதனையடுத்து, இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு, விசேட அதிரடிப்படையினருடன் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டு செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

350px-tm-46_ap-mine.jpeg-300x198

Related posts: