குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சி மருந்து குடித்த குடும்பப் பெண் மூன்று நாட்களின் பின் மரணம்!

Wednesday, December 7th, 2016

குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சி மருந்து அருந்தித் தற்கொலைக்கு முயற்சித்த யாழ். ஆனைப்பந்திப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) உயிரிழந்தார்.

கணவன்- மனைவிக்கிடையில் இடம்பெற்ற குடும்பப்  பிணக்கு காரணமாகக் குறித்த பெண் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை அருந்தித் தற்கொலைக்கு முயற்சித்திருந்தார். இந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சித்த குடும்பப் பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ். போதனா வைத்க்தியசாலையில் உயிரிழந்தார்.

யாழ். ஆனைப் பந்திப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.  மரண விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1461577651-8411

Related posts: