குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை  பெய்யும்!

Tuesday, November 22nd, 2016

யாழ். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை பெய்துள்ளது. நேற்றும் காலை 08.15 மணி தொடக்கம் ஒரு மணிவரை கடும் மழை பெய்துள்ளது.  இதனால் யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும், வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.

வலிகாமம் பகுதியில் நேற்று இரவு மீண்டும் கடும் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பிதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.  யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 138.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இக்காலநிலை இன்னும் மூன்று தினங்களுக்கு தொடரும் எனவும் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன், திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

Evening-Tamil-News-Paper_80249750615

Related posts: