கிழக்கு கடற்பரப்பில் இரண்டு படகுகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது – கடற்றொழில் அமைச்சு!

Wednesday, January 4th, 2017

கிழக்கு கடற்பரப்பில் இரண்டு படகுகள் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென கடற்றொழில் அமைச்சு தெரிவித்தது.

ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமற்போன ஆறு மீனவர்கள் தொடர்பில் கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் மேற்கொண்டு வரும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் இரண்டு படகுகளும் எரிபொருளின்றி கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதென கடற்றொழில் அமைச்சின் உதவி பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார்.

இதனையடுத்து, இரண்டு படகுகளையும் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

காணாமற்போன மீனவர்கள் தொடர்பில் அனைத்து கடற்படை படகுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி கூறினார்.

ஒலுவில் துறைமுகத்தில் இருந்து கடந்த 24 ஆம் திகதி கடலுக்கு சென்ற மீனவர்கள் ஆறு பேர் கரைக்குத் திரும்வில்லை என அந்த மீனவர்களின் உறவினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர் அது தொடர்பான விசாரணைகள் கல்முனை பொலிஸாரினால் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

boat-missing

Related posts: