கல்வி நிலையங்களால் மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது – கட்டுப்பாடுகள் வேண்டும் என யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலைய இயக்குநர் வலியுறுத்து!

Friday, June 9th, 2023

கல்வி நிலையங்களின் பாதிப்பால் மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது. வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருந்து வாழ்க்கை முறையின் பெரும் பகுதியை இழந்து வருகின்றோம். தற்சமயம் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றமடைந்து  ஒழுக்கநெறி  முறையும் மாற்றமடைந்துள்ளது என யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலைய இயக்குநர் வணபிதா ஜேம்ஸ் தெரிவித்தார்.

இங்கு வந்துள்ள அனைவரும் உங்களுக்கேற்ற பிரிவிற்கூடாக  பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் கருவியாக செயற்பட வேண்டும். இல்லையாயின் இவை அனைத்தும் ஆவணங்களாகவே பத்திரப்படுத்தப்படும்.

அறநெறிப் பாடசாலைக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் வழங்காமையே பிரதான காரணம். கல்வியை மட்டும் வழங்கினால் முழு மனிதனாகி விடாது. இதனுடன் கல்வியுடன் ஒழுக்கமும் ஆன்மீகத்தையும் இணைத்து பெற்றுக்கொண்டாலே முழு மனிதானாக முடியும்.

கல்வி நிலையங்களின் பாதிப்பால் 3 வயதிலே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது. வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருந்து வாழ்க்கை முறையின் பெரும் பகுதியை இழந்து வருகின்றோம். தற்சமயம் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றமடைந்து  ஒழுக்கநெறி  முறையும் மாற்றமடைந்துள்ளது.

கல்வி நிலையங்களை பிழை என கூறி விடமுடியாது, மாறாக கல்வி நிலையங்களுக்கு யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

மறைக்கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் நடாத்தப்பட யாழ்.மாவட்ட அரச அதிபர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: