கல்லுடைக்க வெடி வைத்தவர் ஒருவர் காயம்!

Monday, August 1st, 2016

கைதடி பகுதியில் கல்லுடைப்பதற்கு வெடி வைத்த குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்று (31) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லுக்கு வைத்த வெடி தவறுதலாக வெடித்துள்ளது. இதனால் வெடித்து சிதறிய கல்லின் பாகங்கள் இவரின் மீது பட்டதில் உடல் முழுவதும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts: