கண்டி குப்பைமேடு ஆபத்து விரைவில்!

Friday, May 5th, 2017

கண்டி நகரப்பகுதியின் குப்பைகளை அப்பறப்படுத்தி சேர்க்கப்படுகின்ற நிலையில் கொஹாகொட, தேக்கவத்தகுப்பைமேடு சரிகின்ற ஆபத்து இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அத்துலசேனாரட்ண தெரிவித்துள்ளார்.

கண்டிநகரின் குப்பைகள் 1969 இல் இருந்து இப்ப குதியில் கொட்டப்படவதாகவும், 1998 அம் ஆண்டிலிருந்து இக்குப்பைமேட்டில் அனர்த்தம் ஏற்படக் கூடியவாய்ப்புகள் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 200 தொன் குப்பைகள் கொட்டப்படும் நிலையில் எந்தசந்தர்ப்பத்திலும் குப்பைமேடு சரியும் பட்சத்தில் மாவலிகங்கைநீர் அசுத்தமாகிபாரியசூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: