ஐந்து பிரபல வங்கிகள் ஈட்டிய இலாபத்தை விட வரி  செலுத்தியதன் பின்னர் இலாபம் ஈட்டிய Perpetual Treasuries நிறுவனம்!

Monday, October 3rd, 2016

மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பிலான சர்ச்சையுடன் தொடர்புப்பட்ட Perpetual Treasuries நிறுவனம் வரி செலுத்தியதன் பின்னர் ஈட்டிய இலாபமான 5.2 பில்லியன் ரூபா நாட்டில் உள்ள ஐந்து பிரபல வங்கிகள் ஈட்டிய இலாபத்தை விட அதிகம் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக அனுபவமுள்ள போட்டித்தன்மை மிக்க நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் புதிய நிறுவனம் ஒன்று வியக்கத்தக்க வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனுக்கு சொந்தமான அந்த நிறுவனம் 5 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டும் பொழுது இரண்டாம் நிலையிலுள்ள கெப்பிட்டல் அலையன்ஸ் நிறுவனம், குறித்த காலப்பகுதியில் 57 மில்லின் ரூபாவை மாத்திரமே இலாபமாக பெற்றுள்ளது.

Perpetual Treasuries நிறுவனம் 5.2 பில்லியன் இலாபத்தை ஈட்டிய காலப்பகுதியில் DFCC வங்கி 4.3 பில்லியன் ரூபாவையும், செலான் வங்கி 3.8 மில்லியன் ரூபாவையும், NDB வங்கி 3.5 பில்லியன் ரூபாவையும், NTB வங்கி 2.6 பில்லியன் ரூபாவையும் PABC வங்கி ஒரு பில்லியன் ரூபாவையும் யூனியன் வங்கி 192.6 மில்லியன் ரூபாவையும் வருமானமாக ஈட்டியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Perpetual Treasuries நிறுவனம் தமது செயற்பாடுகளை 2013 ஆம் ஆண்டே ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தாமையால் முதன்மை வாடிக்கையாளர்கள் விரக்தியடைந்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

கடந்த வாரம் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடப்பட்டது.

Perpetual-tressuries

Related posts: