ஏப்ரல் மாதமளவில் விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொள்ள நிதி வழங்கப்படும்!

Friday, March 18th, 2016
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதியளவில் உரம் பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவுற்றுள்ளதாகவும் காணி உரிமையார்களின் அடையாள அட்டைகளின் தகவல் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் 80 வீதத்தினால் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் வங்கிகளுக்கு அனைத்து தகவல்களும் பெற்று கொடுக்கப்படும் எனவும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உர மானியத்திற்கு பதிலாக உரத்திற்கான பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: