எவரெஸ்ட்டை தொட்ட முதல் இலங்கைப் பெண்!

Sunday, May 22nd, 2016
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கையராக பெண் ஒருவர் வரலாற்றில் தடம்பதித்துள்ளார்.

ஜயந்தி குரு உதும்பலா என்பவரே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கையராவார். 29,029 அடிகளைக் கொண்ட எரெஸ்ட்டின் 26000 அடிகளுக்கு அப்பாலுள்ள சிகரம், மரணத்தின் அடவியாகக் கருதப்படுகின்றது.

இலங்கை தேசியக் கொடியுடன் நேற்றிரவு 9 மணிக்கு சிகரத்தை நோக்கி ஏறுவதற்கு ஆரம்பித்த ஜயந்தி, இன்றைய சூரிய உதயத்தின் போது உலகின் உயர்ந்த மலை சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தார்.

37 வயதான ஜயந்தி, பெண் உரிமைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான விவகாரங்களுக்கான விசேட நிபுணராகவும் திகழ்கின்றார்.

ஜயந்தி குரு உதும்பலா மற்றும் யொகான் பீரிஸ் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி கடந்த ஏப்ரல் மாதம் பயணத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பான விசேட தொகுப்பு ஒன்றையும் நியூஸ்பெஸ்டில் நாம் ஔிபரப்பியிருந்தோம்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான கால அட்வணையின் பிரகாரம், யொகான் மற்றும் ஜயந்தி ஆகிய இருவரும் நேற்றைய தினமே சிகரத்தை அடையவிருந்தனர்.

சிகரத்தை அண்மித்த போது நிலவிய சீரற்ற வானிலை அவர்களது பயணத்திற்கு சிறிது தாமதத்தை ஏற்படுத்திய போதும் அவர்கள் தைரியம் இழக்கக் காரணமாக அமையவில்லை.

இலக்கம் நான்கு முகாமில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு புறப்பட்ட ஜயந்தி, அதிகாலை 5 மணிக்கு சிகரத்தில் கால் பதித்ததாக அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குழு எமக்கு உறுதி செய்தது.

காலம் கடந்து விட்டமையால் யொகான் பீரிஸ் இன்று சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளவில்லை. ஜப்பான் பிரஜையான ஜுன்கோ தெபெய் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதலாவது பெண்ணாக 1975 ஆம் ஆண்டு சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

4093 மலையேறிகள் இதுவரை எவரஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக அதன் சாதனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜயந்தி குரு உதும்பலா உலகின் உயர்ந்த சிகரத்தை அடைந்த 419 ஆவது பெண்ணாகப் பதிவாகியுள்ளார்.

உலகின் கவனத்தை தன்வம் ஈர்த்துள்ள ஜயந்தி, எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை எவரெஸ்ட் சிகர முகாமை சென்றடையவுள்ளார்.

everest

Related posts: