அழிவின் விளிம்பில் இருக்கும் எறும்பு தின்னிகளை பதப்படுத்தியவர் கைது!
Friday, August 26th, 2016
அழிவுறும் விளிம்பில் இருக்கின்ற விலங்கினங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் 650 எறும்புண்ணிகளை பிளாஸ்டிக்கில் சுற்றி வீட்டில் குளிர்பதனப் பெட்டிகளில் அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ள இந்தோனேஷீய காவல்துறையினர் அது தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கின்றனர்.
அந்த நபரிடம் இருந்த அதிக எண்ணிக்கையிலான பதப்படுத்தும் குளிர்சாதனப்பெட்டிகளை பார்த்து காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பதப்படுத்தும் பெட்டிகளுக்குள்ளே எறும்புகளை உணவாக உட்கொள்ளும் எறும்புண்ணிகள் உறைநிலையில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எறும்புண்ணிகளின் இறைச்சி மிகவும் சுவையானதாக ஆசியாவின் பல பகுதிகளில் கருதப்படுகிறது. விலங்குகள் கடத்தலை ஒழிப்பதில் ஆட்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டுவருவதாக இந்தோனேஷீயாவின் கடத்தல் ஒழிப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
Related posts:
"சைலன்ஸ் இன் த கோட்" திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு!
ஜிமெயில் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம்!
உலகின் முதல் விமானி இராவணன்தான்!
|
|
|


