எனது கணவரை மீட்டுத்தாருங்கள் – மனைவியின் உருக்கமான கோரிக்கை!

Thursday, March 16th, 2017

சில தினங்களுக்கு முன்னர் சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் பிரதான அதிகாரியின் மனைவி உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த கப்பலின் பிரதான அதிகாரியாக செயற்பட்ட மத்துகமவை சேர்ந்த கே.டீ.ப்ரேமனாத் என்பவரது மனைவியே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கே.டீ.ப்ரேமனாத்தின் உறவினர்கள் வெளிவிவகார அமைச்சிக்கு சென்று சம்பவம் தொடர்பில் தகவல்களை கேட்டறிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்தே இவரை மீட்டுத்தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தப்பட்ட கப்பலில் 8 இலங்கையர்கள் இருப்பதாக கடற்படை தரப்பினர் உறுதி செய்திருந்தனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட டுபாய் நாட்டுக்குச் சொந்தமான கப்பலையும், அதிலுள்ள 8 இலங்கையர்களையும் விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளனர் என சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பத் தொகை தொடர்பில் என்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அந்த கப்பலின் பிரதான அதிகாரியான தனது கணவரையும் மீதமுள்ள 7 பேரையும் இயன்றளவு விரைவில் விடுவித்து தருமாறு அவரின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Related posts: