எட்டாவது இடத்தில் இலங்கை?

ஆசிய நாடுகள் வரிசையில் தேசிய நாடாளுமன்ற அரசியலில் பெண்களின் பங்கை குறைவாக கொண்ட நாடாக இலங்கை உள்ளதென சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தான் மூன்றாம் இடத்தையும், இந்தியா ஐந்தாம் இடத்தையும், பூட்டான் ஆறாவது இடத்தையும், மாலைதீவு ஏழாவது இடத்தையும் இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளன.
சர்வதேச ரீதியில் நேபாளம் 48, ஆப்கானிஸ்தான் 54, பாகிஸ்தான் 70, பங்களாதேஸ் 91, இந்தியா 148, பூட்டான் 170, மாலைத்தீவு 179, இலங்கை 180 என்ற இடங்களில் உள்ளன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய தகவல்படி இலங்கையின் 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது பால்சமத்துவம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும், அந்த தேர்தலில் போட்டியிட்ட 6151 வேட்பாளர்களில் 556 பேர் மாத்திரமே பெண்களாக இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண நிர்வாக ஆட்சிமுறையில் 4.1வீதமானோரே பெண்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|