எடை நிறுத்தற்கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பம்!

Saturday, February 25th, 2017

குடா நாட்டில் வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தப்படும் தராசுகள், அளவுப்படிகள் ஆகியவற்றை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் பரிசீலனை செய்து முத்திரை இடவேண்டும் என யாழ்.மாவட்ட செயலகத்தின் அலகுகள் நியமங்கள் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தினை மானிப்பாய்ப் பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பித்துள்ளர். அந்த நிலையில் எதிர்வரும் தினங்களில் யாழ்.குடா நாட்டிலும் மேற்கொள்ளப்படவுள்ளனர்.

மேலும், 2017ஆம் ஆண்டிற்கான முத்திரையிடும் பணிகள் அந்த பகுதியின் பிரதேசசெயலகங்களின் மூலம் செயற்படுத்தபடவுள்ளதுடன் வர்த்தகர்கள் பயன்படுத்தும் அளவைத் தராசுகள், நிறைப்படிகள் போன்றவற்றில் நியம அளவுகள் உரியமுறையில் பரிசீலனை செய்யப்பட்டு முத்திரைகள் இடப்படவுள்ளன.

scale-final

Related posts: