ஊர்காவற்றுறை படுகொலை: விரைவான விசாரணை தேவை யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் வலியுறுத்து!

Monday, January 30th, 2017

ஊர்காவற்றுறையில் வசித்த ஞானேஸ்வரன் மேரி ரம்சியாவின் படுகொலை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கலாம் தாழ்த்தாது விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது

இது தொடர்பில் அந்தச் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

புங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் விசாரணைகள் பூர்த்தியாகி குற்றவாளிகன் தண்டிக்கப்படாத நிலையில் தீவகப் பிரதேசத்தில் ரம்சியாவின் இந்தப் படுகொலையும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. சாதாரண பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பற்று இருப்பதைப் பகல் நேரத்தில் நடந்த இந்தக் கொடூரமான படுகொலை வெளிகாட்டுகின்றது. குற்றாளிகள் யாராக இருந்தாலும் காலம் தாழ்த்தாது சட்ட நடவடிக்கைகளுக்கு முன்னிறுத்தப்பட்டு பக்கச் சார்பற்ற முறையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு கடுiமாயகத் தண்டிக்கப்பட வேண்டும். என்றுள்ளது.

murder

Related posts: