உடுவில் வை.எம்.சி.ஏக்கு ஈ.பி.டி.பி விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு.

Monday, May 1st, 2017

சிறார்களின் மாலை நேரமகிழ்வூட்டலையும்,பொழுது போக்கினையும் கருத்தில் கொண்டு உடுவில் வை.எம்.சி.ஏ ஸ்தாபனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் “கரம்போட்”விளையாட்டு உபகரணம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நாள் தோறும் மாலை வேளைகளில் குறித்த ஸ்தாபனத்திற்கு மகிழ்வான பொழுது போக்கிற்காகவும், மகிழ்வூட்டலுக்காகவும் அதிகளவான சிறார்கள் வருகை தருவது வழக்கமான செயற்பாடாகவுள்ளது.

இந்நிலையில் “கரம்போட்”விளையாட்டு உபகரணத்தை வழங்குமாறு குறித்த ஸ்தாபனம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச நிர்வாகச் செயலாளரிடம் கோரிக்கையினைமுன் வைத்திருந்தது.

இதன் அடிப்படையில் சிறார்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு ஸ்தாபனத்திற்கு“கரம்போட்”விளையாட்டு உபகரணத்தை வலன்ரைன் கையளித்தார்.

தமது கோரிக்கையினை எற்றுக்கொண்டு விளையாட்டு உபகரணத்தை காலக்கிரமத்தில் பெற்றுத்தந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்குவை. எம்.சி.ஏ ஸ்தாபனம் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: