இவ்வாண்டு 5ஆயிரம் நாய்களுக்கு விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டது!

Friday, November 4th, 2016

யாழ்.மாநகர பகுதியில் இவ்வாண்டு இதுவரைக்கும் 5000இற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர்நோய் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் யாழ்.நகர் பொதுச் சுகாதார சேவைப்பிரிவில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றப்படும். இதில் 500 வரையிலான நாய்களுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றப்படவுள்ளது.

குடியிருப்பாளர்கள் தமது வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி மருந்தகளை ஏற்றவேண்டும் என்றும் சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனைவிட கட்டாக்காலியாக நடமாடும் நாய்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு ஆண் நாய்களுக்கு கருத்தடையும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6_2133104f

Related posts: