இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தகவல்!

Tuesday, January 11th, 2022

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

24 மாநகர சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை நீடித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தலுக்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்ததா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே

தேவை ஏற்பட்டால் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாயத்த நடவடிக்கையாக இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: