இலங்கை -சீனா இடையே நேரடி விமான சேவை! 

Sunday, June 3rd, 2018

சீனாவில் இருந்து அதிக சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் நோக்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றார்.

இதற்கமைய அமைச்சர் சீனாவின் சுற்றுலாத்துறை சார் உயர்மட்ட அதிகாரிகளுடனும், வானூர்தி போக்குவரத்து சேவைத் தரப்புக்களுடனும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் Shanghai, Nanjing,Chengdu ஆகிய முக்கிய நகர்களில் இது தொடர்பான கட்டம் கட்டமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடல்களின்போது, இலங்கைக்கும் சீனாவிற்குமான நேரடி விமான சேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts: