இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Sunday, August 1st, 2021

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித்த ஹேரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர், தனது கடமைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜகத் வெள்ளவத்த அண்மையில் நீக்கப்பட்டார். இந்நிலையிலேயே விஜித்த ஹேரத் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: