இலங்கை உள்ளிட்ட அகதிகளை ஏற்பதில் அமெரிக்கா செனட் எதிர்ப்பு!

Friday, November 25th, 2016

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதற்கு அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை தலைவர் சக் க்ரேஸ்லி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் உள்துறை செயலாளர் ஜே.ஜோன்சன் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார். ஆஸ்திரேலிய அரசால் நிராகரிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்று அண்மையில் தகவல்கள் வெளியாகின. இவ்வாறு இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் திட்டம் தொடர்பில் இராஜங்;க திணைக்களம், அமெரிக்க காங்கிரஸிற்கு தெரியப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு செம்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி வருடாநடத அகதிகள் மாநாடு நடைபெற்ற போதும் இத் திட்டம் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா ஆகிய நாடுகளின் அகதிகளால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. அத்துடன் ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுக்கொள்ளாமைக்கான  காரணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5105974 copy

Related posts: