இலங்கையில் திரிபடைந்த கொரோனா வைரஸ் – கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகப்பேறியல் நிபுணர்!

Wednesday, April 28th, 2021

இலங்கையில் பரவிவரும் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்திவரவதாக மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த வைரஸ் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது எனவும் ஊடகவியலாளர்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் தற்போதுவரை நாட்டில் 3 கர்ப்பிணித் தாய்மார்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனாத் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் சிறிய அறிகுறிகள் தோன்றினாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: