இரு குழுக்களிடையே முறுகல் நிலை : யாழில் பதற்றம்!

Tuesday, May 22nd, 2018

ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அருகாமையில் ஹலீமா வீதியில், விடுதி அமைக்கும் பணிக்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதை தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முறுகல் றிலை தோன்றியுள்ளதால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவிவரகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த விடுதி அமைப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ள போதிலும், அந்த பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பு காரணமாக விடுதி அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளுக்கு யாழ். மாநகர சபையினர் தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகிய நிலையில், அந்த பகுதி முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடு காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: