ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சர்!

Monday, May 24th, 2021

நாட்டில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளில் 50 வைத்தியசாலைகளை கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடை சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் திருமதி.பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவிக்கையில் –  இந்த கலந்துரையாடலின் போது ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா நோய் சிகிச்சைக்காக பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலைகள் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்படுவதையடுத்து 3 ஆயிரத்து 500 கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

சம்பந்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா நோய் சிகிச்சை சேவை தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதே போன்று இவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசியும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: