ஆள்கடத்தலை முறியடிக்க ஆளில்லா விமானங்களை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்திரேலியா!

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் கடல்வழியாக மேற்கொள்ளப்படும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளது.
இலங்கை பொலிஸாருக்கே அவுஸ்திரேலியா இந்த ஆளில்லா விமானங்களை வழங்கியுளளது
இலங்கை இயற்கை அனர்த்தங்களை மதிப்பிடுதல் எல்லை கடந்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்தல் ஆகியவை தொடர்பிலான தனது திறமையை அதிகரித்துக்கொள்வதற்கு உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அவுஸ்திரேலியா இந்த ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளதாகவும் இறைமை எல்லை செயலணி நடவடிக்கை தொடர்பான அமைப்பின் தளபதி ரியர் அட்மிரல் மார்க் ஹில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதன் மூலம் ஆள்கடத்தல் காரர்களிற்கும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத குடியேற முயல்பவர்களிற்கும் அவர்களது முயற்சிகள் வெற்றியடையாது என்ற செய்தியை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்க முடியாத பகுதிகளில் ஆள்கடத்தல் இடம்பெறுவதை ஆளில்லா விமானங்களால் கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|