‘அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழ நல்லூர் அடங்காது!’: தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழில்  போராட்டம்! 

Wednesday, January 18th, 2017
இந்தியாவின்  தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டினை நிறுவத்துவதற்காக இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதனை வன்மையாகக்  கண்டித்தும், தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக வன்முறை பிரயோகிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று புதன்கிழமை(18) மாலை-04 மணியளவில் யாழ்.இளைஞர்கள் ஒன்றிணைந்து  மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் தமிழனின் தனித்துவம்!இனத்தின் வீர விளையாட்டு! எனும் தலைப்பின் கீழ்  “ஏறு தழுவுதல்” மீட்புப் போராட்டத்தில் உயிர் உருகும் தாய்த் தமிழக உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஈழத்தமிழ் உறவுகள் நாங்கள்!,  தடை அதை உடை! போன்ற பிரதான வாசகத்தைத் தாங்கியும் “அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழ நல்லூர் அடங்காது!”,  “உயிரனைய தமிழகமே உறவுணர்ந்து எழுகின்றோம்”, “உலகம் தமிழனை உற்று நோக்கும் எங்கள் ஒற்றுமை உங்களை ஓட விரட்டும்!”, “PeTA எம் இனத்தின் எதிரி!நின்று பார் எம் நெருப்பின் முன்னாள்!”, “ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம்” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
unnamed
16114215_586933544830450_5159599837792167375_n
5

Related posts: