அரிசியின் விலை தொடர்ந்து உயர்வு!

Monday, December 5th, 2016

நாட்டில் அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையில் அரிசியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை கடைகளில் நடத்திய ஆய்வு மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரணமாக பயன்பாட்டுக்கு உகந்த அரிசி 1 கிலோவின் விலை 90ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதற்கு முன்னதாக 1கிலோ அரிசியின் விலை 60ரூபாவாக காணப்பட்டது. அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் சந்தையை கட்டுப்படுத்தி வரும் காரணத்தினால் விலைகள் இவ்வாறு உயர்வடைந்துள்ளன. பாரிய அளவிலான அரிசி வியாபாரிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அரிசியின் விலையைக் குறைக்க முடியும் என சிறிய அரிசி ஆலை உரிiமாயளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.

Tamil-Daily-News_58800470830

Related posts: