அரசு பொறுப்புக்கூற தவறியுள்ளது -சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம்!

Saturday, November 18th, 2017

மனித உரிமைகள் உட்பட முக்கியமான விடயங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற தவறிவிட்டதாக ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையினது உலக பருவகால மீளாய்வுக் கூட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பலஉறுதிமொழிகளை வழங்கியது. பொறுப்புக்கூறல், நீதிவழங்கல், பாதுகாப்பு தரப்பின் மறுசீரமைப்பு உட்பட விடயங்களில் இந்த உறுதிமொழிகள்அமைந்தன. இருப்பினும் இவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது. எனவே ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Related posts: