அரசாங்கம் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்!

Saturday, January 13th, 2018

இளம்தொழிற்துறையினரை உருவாக்கி பொருளாதார செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவிற்கமைவான வேலைத்திட்டம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழான கடன் உதவியில் இளைஞர் தொழிற்துறையினருக்கு நிவாரண வட்டி அடிப்படையிலும் அரச பிணையின் கீழும் இதன் கீழான 15திட்டங்களுக்கென 60 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்துறைக்கு உள்வாங்கப்படுவோர் சுயமாக வர்த்தக நடவடிக்கை மேற்கொள்வதற்கும் விவசாயம் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் உள்ளிட்டஎத்தகைய துறையிலும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக 75 சதவீத நிவாரண அடிப்படையில் அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இதற்குரிய வட்டியை அரசாங்கம் பொறுப்பேற்பதுடன் இதை செலுத்துவதற்காக 5ஆயிரம் மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது.

Related posts: