அனுமதிப் பத்திரமின்றிச் செம்மண் ஏற்றிச் சென்றவர் கைதானார்

Tuesday, April 25th, 2017

அனுமதிப் பத்திரமின்றி யாழ். வயாவிளான் பிரதேசத்திலிருந்து திருநெல்வேலிப் பிரதேசம் நோக்கிக் ஹன்ரர் வாகனத்தில் செம்மண் எடுத்துச் சென்றவர் யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் வயாவிளான் பகுதிக்குச் சென்ற பொலிஸார் சந்தேகத்திற்கிடமான ஹன்ரர் வாகனத்தை வழிமறித்துச் சோதனை நடாத்தினர். இதன் போது அனுமதிப்பத்திரமின்றிச் செம்மண் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்துச் சந்தேகநபரான சாரதி கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: