அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Sunday, November 26th, 2017

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அதிபர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தரம் ii நாகர்கோவில் அ.மி.த.க பாடசாலை, தரம் iii துன்னாலை வடக்கு மெ.மி.த.க பாடசாலை, தரம் iii புனிதநகர் தமிழ் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவிக்கு விண்ணப்பிக்கத் தகைமைகளாக பின்வருவன கொள்ளப்படும் தரம் ii பாடசாலைக்கு விண்ணப்பிப்போர் இலங்கை அதிபர் சேவையில் தரம் ii அல்லது அதற்கு மேற்பட்ட தகைமையுடையவராக இருத்தல் வேண்டும். தரம் iii பாடசாலைக்கு விண்ணப்பிப்போர் அதிபர் சேவையில் தரம் iii அல்லது அதற்கு மேற்பட்ட தகைமையுடையவராக இருத்தல் வேண்டும்.

அதிபர் தரத்துக்குப் பொருத்தமற்ற பாடசாலைகளில் கடமையாற்றுபவர்களும் இலங்கை அதிபர் சேவையில் கடமையாற்றாதவர்களும் விண்ணப்பிக்கமுடியும். வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிரந்தரமாக சேவையாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி கடமையாற்றும் பாடசாலையில் குறைந்தது 3 வருடங்கள் சேவையாற்றியிருத்தல் வேண்டும்.

வலயக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்குமாறு வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: