அதிக செலவு நிறைந்த நகரங்கள் வரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம்!

Wednesday, March 29th, 2017

தெற்காசிய நாடுகளில் உள்ள நகரங்களில் அதிக செலவு நிறைந்த நகரங்கள் வரிசையில் கொழும்பு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் உலக அளவில் 108 வது இடத்தில் இருப்பதாகவும் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

பொருளாதார புலனாய்வு பிரிவினர் நடத்திய மேற்படி ஆய்வு தொடர்பாக அறிக்கை தி எகனோமிஸ்ட் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகில் அதிக செலவு நிறைந்த நகரமாக சிங்கப்பூர் முதலாவது இடத்தில் உள்ளது. நியூயோர் நகரை சிங்கப்பூரில் செலவானது 20 வீதம் அதிகமாகும்.

ஹொங்கொங் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன் சூரிச், டோக்கியோ, ஒசாகா மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன. உலக அளவில் கொழும்பு நகரம் 108 வது இடத்தில் உள்ளதுடன் தெற்காசியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தெற்காசியாவில் அதிகமான செலவு நிறைந்த நகரமாக பங்களாதேஷின் டாக்க நகரம் இடம்பிடித்துள்ளது.

நேபாளத்தின் காத்மண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. 133 நாடுகளில் 160 பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளை அடிப்படையாக கொண்டு இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: